கொடையின் தன்மை

 கழைதின் யானையார் என வழங்கப்பட்ட புலவர் கொல்லி மலையரசனாகிய வல்வில்  ஓரியிடம் பரிசு பெற வந்தபோது இயற்றிய பாட்டு.(புறநானூறு 204)

------------------------------------------------------------

ஈயென விரத்தலி  ழிந்தன்ற தனெதிர்

ஈயேனென் றலதனினு மிழிந்தன்று

கொள்ளெனக்   கொடுத்தலு  யர்ந்தன்ற தநெதிர்

கொள்ளே னென்றல  தனினுமு  யர்ந்தன்று;

தெண்ணீர்ப் பரப்பினி  மிழ்திரைப் பெருங்கடல்

உண்ணா ராகுப நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்

சேறொடு பட்ட சிறுமைத்தா  யினும்

உண்ணீர் மருங்கின தர்பல வாகும்

புள்ளும் பொழுதும் பழித்தல ல்லதை

உள்ளிச் சென்றோர் பழியல ரதனால்

புலவேன் வாழிய ரோரி விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே


-------------------------------------------------------------------


ஈயென விரத்தலி  ழிந்தன்ற தனெதிர்


ஈதல் -கோருதல்; வேண்டுதல்;

"ஈ!" என இரத்தல் - "பொருள் தா" என்று கேட்பது);இழிந்தன்று - இழிவானது;

அதன் எதிர் -அதற்கு நேர்மாறாக(on the other hand)

(இவ்விடம் -ன்று என்ற இணைச்சொல் "ஆமோதிப்பை" குறிக்கிறது. 

அன்று என்ற இணைச்சொல் "எதிர்மறையை" குறிக்கிறது.

உலகம் உருண்டையன்றோ?(உருண்டையல்லவா?)

அந்த  ஏரியின் நிறம் நீலமன்று.(அந்த ஏரியின் நிறம் நீலம் அல்ல; வேறு நிறம்).


ஈயேனென் றலதனினு மிழிந்தன்று

ஈயேன் - பொருள் தரமாட்டேன்; என்றல்- என்றிருத்தல்; அதனினும்-  அதனைக் காட்டிலும்; இழிந்தன்று- இழிவானது;



கொள்ளெனக்   கொடுத்தலு  யர்ந்தன்ற தநெதிர்

கொள் - எடுத்துக் கொள்!; எனக் கொடுத்தல் உயர்ந்தன்று -  சிறப்பானது;அதன் எதிர்


கொள்ளே னென்றல  தனினுமு  யர்ந்தன்று;

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று 

கொள்ளேன்-கொடுத்தாலும் வேண்டாம்; என்றல் அதனினும் உயர்ந்தன்று 

--
முதலில் தன்னுடைய தர்ம சங்கடத்தை வெளிப்படுத்துகிறார் "பரிசில் கேட்பது வெட்கக்கேடுஆனால் நான் இங்கு வந்திருப்பது பொருளுக்காக என் நிலைமை அப்படிகேட்டவர்க்கு கொடுக்காமலிருப்பது அதைவிடக் கேவலம்ஆனால் நீ அப்படிப்பட்டவனல்ல(ஓரி கடையெழு வள்ளல்கட்குள் ஒருவன்). நீ இருந்தால் கொடுக்காமல் இருக்கமாட்டாய்கொடுப்பது மிகச்சிறந்ததுகொடுத்தால் அதை மறுப்பதும் சிறந்ததுவென்றெனக்கு தெரியும்அனால் மறுக்கும் தருவாயில் இல்லையே நான்?"


தெண்ணீர்ப் பரப்பினி  மிழ்திரைப் பெருங்கடல்

உண்ணா ராகுப நீர்வேட் டோரே;

ஆவும்மா வும் சென்றுணக் கலங்கிச்

சேறொடு பட்ட சிறுமைத்தா  யினும்

உண்ணீர் மருங்கின தர்பல வாகும்

 

இங்கொரு உவமையும் கொடுக்கிறார்: "ஒரு பேரரசன் எத்தனை செல்வமிருந்தும் கொடையாளியாகவிட்டால்அவனிடம் எவரும் அண்டோர்(கடலில் அளவுக்கதிகமான தெளிந்த வெள்ளமிருந்தும் தாகித்தோர் பருகார்); அனால் ஓரியைப்போல் குறுநிலத்தையாண்டாலும் கொடைக்கு பெயர்போனவனானதால்அவனிடம் எளியோர் பொருள் பெற வருவர்.(கலங்கியமானும் மற்ற மிருங்களும் சேறாக்கிய குடிநீர் சுனைக்கே பல பாதைகளமையும்)."

 

மேலும் கூறுகிறார்:

 

"அத்தகைய குடிநீர் சுனையானது  சில சமயம் வற்றியிருக்கலாம்அப்போது குடிக்க வந்தவர் சுனையை நிந்தியாது வேறு ஓர் ஊற்றை நாடிச்செல்வார்கள்அதைப்போல் உன்னிடம் பொருளில்லாவிட்டால் அது என் போதாதா காலமே தவிரஉன கொடையில் குறையில்லைஅது வாரி வழங்கும் மாரியைபோலானதல்லவோஎனவே ஓரியே உன்னை வாழ்த்துகிறேன்உன் கொடை  வளரட்டும்!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாடையைக் கண்டபிறகும்...