பாடையைக் கண்டபிறகும்...

பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர்

திணை: காஞ்சி 

துறை: பெருங்காஞ்சி 


பெரிது ஆராச் சிறு சினத்தர்,

சில சொல்லால் பல கேள்வியர்,

நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்

கலுழ் நனையால் தண் தேறலர்,

கனி குய்யாற் கொழுந் துவையர், 5

தாழ் உவந்து தழூஉ மொழியர்,

பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி

ஏம மாக இந்நிலம் ஆண்டோர்

சிலரே; பெரும! கேள் இனி ; நாளும்,

பலரே தகை அது அறியா தோரே! 10

அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;

இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்

நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்

நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்

பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத 15

கள்ளி போகிய களரி மருங்கின்,

வெள்ளில் நிறுத்த பின்றைக் , கள்ளொடு

புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,

புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு,

அழல்வாய்ப் புக்க பின்னும், 20

பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொடையின் தன்மை