இடுகைகள்

உலகமிதுதான்!

 புறநானூறு :- 194 ஆம் பாடல் பாடல் ஆசிரியர் :- பக்குடுக்கை நண்கணியார் பாடல் :- ஓரில் நெய்தல் கறங்க, ஒரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்  படைத்தோன் மன்ற அப் பண்பிலான் இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல் புணர்ந் தோரே..

பாடையைக் கண்டபிறகும்...

பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர் திணை: காஞ்சி  துறை: பெருங்காஞ்சி  பெரிது ஆராச் சிறு சினத்தர், சில சொல்லால் பல கேள்வியர், நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர் கலுழ் நனையால் தண் தேறலர், கனி குய்யாற் கொழுந் துவையர், 5 தாழ் உவந்து தழூஉ மொழியர், பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி ஏம மாக இந்நிலம் ஆண்டோர் சிலரே; பெரும! கேள் இனி ; நாளும், பலரே தகை அது அறியா தோரே! 10 அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத 15 கள்ளி போகிய களரி மருங்கின், வெள்ளில் நிறுத்த பின்றைக் , கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி, புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு, அழல்வாய்ப் புக்க பின்னும், 20 பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே.

எது அழகு?

நீயே, அமர்காணின் அமர் கடந்து அவர் படை விலக்கி எதிர் நிற்றலின்  வா அள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே அவரே நிற்காணின் புறங் கொடுத்தலின் ஊறு அறியா மெய்யாக்கை யொடு  கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே.. அதனால் நீயும் ஒன்று இனியை..அவரும் ஒன்று இனியர்.. ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க் கழல் புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி நின்னை வியக்குமிவ் உலகம் அஃது என்னோ பெரும உரைத்திசின் எமக்கே...

அவை அறிதல்

 அவை அறிதல் adhigaaram 72

யாவரும் கேளிர்

 புறநானூறு 192 TBD

கொடையின் தன்மை

  கழைதின்   யானையார்   என   வழங்கப்பட்ட   புலவர்   கொல்லி   மலையரசனாகிய   வல்வில்     ஓரியிடம்   பரிசு   பெற   வந்தபோது   இயற்றிய   பாட்டு .(புறநானூறு 204) ------------------------------------------------------------ ஈயென விரத்தலி  ழிந்தன்ற தனெதிர் ஈயேனென் றலதனினு மிழிந்தன்று கொள்ளெனக்   கொடுத்தலு  யர்ந்தன்ற தநெதிர் கொள்ளே னென்றல  தனினுமு  யர்ந்தன்று; தெண்ணீர்ப் பரப்பினி  மிழ்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே; ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச் சேறொடு பட்ட சிறுமைத்தா  யினும் உண்ணீர் மருங்கின தர்பல வாகும் புள்ளும் பொழுதும் பழித்தல ல்லதை உள்ளிச் சென்றோர் பழியல ரதனால் புலவேன் வாழிய ரோரி விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே ------------------------------------------------------------------- ஈயென விரத்தலி  ழிந்தன்ற தனெதிர் ஈதல் -கோருதல்; வேண்டுதல்; "ஈ!" என இரத்தல் -  "பொருள் தா" என்று கேட்பது); இழிந்தன்று -  இழிவானது; அதன் எதிர் - அ...

குற்றாலமலைப் பெருமை, Sep 6 2020

 வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்    மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்    குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே -------------------------------- குற்றால மலயின் பெருமையை  இங்கனம் கூறுகிறார் கவிராயர்: வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் வானரம்- பொதுவாக ஆண் குரங்கு; மந்தி - பெண் குரங்கு  மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கனி பெற்ற  மந்தி  சிலவற்றை சிந்தவே வான்கவிகள்(கவி என்று குரங்கிற்கு மற்றொரு பொருளும் உண்டு) ஆதங்க படுகின்றன, அவை தவறி கீழே விழுகின்றனவே என்று! கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார் கானவர்கள் - கானகத்திலிருக்கும் வேடர்/அக்கானகத்திலிருப்போர்; விழிஎறிந்து - தங்கள் பார்வையை சற்றே உயர்த்தினாலே;  வானவரை அழைப்பார் - தேவர்களிடம் பேச முடியும் அவ்வளவு உயர்ந்தது மலை! கமனசித்தர் வந...